அப்பாவைப் போல மகள் நம்பிக்கையளிக்கிறார்: சவுந்தர்யாவிற்கு விவேக் பாராட்டு

அப்பாவைப் போல மகள் நம்பிக்கையளிக்கிறார்: சவுந்தர்யாவிற்கு விவேக் பாராட்டு

அப்பாவைப் போல மகள் நம்பிக்கையளிக்கிறார்: சவுந்தர்யாவிற்கு விவேக் பாராட்டு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 7:09 pm

அப்பாவைப் போல மகள் நம்பிக்கையளிக்கிறார் என்ற விவேக்கின் பாராட்டுக்கு சவுந்தர்யா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’.

ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ள இப்படத்தை வண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்று வருகிறது. தற்போது தனுஷ் மற்றும் விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

‘வேலையில்லா பட்டதாரி 2’ படப்பிடிப்பு தளத்திலிருந்து விவேக், “சவுந்தர்யா, சுறுசுறுப்பாகவும், வேகமாகவும், உன்னிப்பாகக் கவனிப்பவராகவும், விரைந்து முடிவெடுப்பவராகவும் இருக்கிறார். அப்பாவைப் போல மகள். நம்பிக்கையளிக்கிறார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இதற்கு பதிலளிக்கும் வகையில், விவேக்கின் ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு, “மிக்க நன்றி. உங்களைப் போன்ற மூத்த அனுபவமுள்ள கலைஞர்களிடமிருந்து பாராட்டு வருவது எனக்கு மிகப்பெரிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்