ஷாருக்கானின் ராய்ஸ் படத்திற்கு பாகிஸ்தானில் தடை

ஷாருக்கானின் ராய்ஸ் படத்திற்கு பாகிஸ்தானில் தடை

ஷாருக்கானின் ராய்ஸ் படத்திற்கு பாகிஸ்தானில் தடை

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 6:10 pm

ஷாருக்கான் நடித்துள்ள ‘ராய்ஸ்’ படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் இந்திய குடியரசு தினத்தில் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

வசூலிலும் சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் நடிகை மஹிரா கானும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ‘ராய்ஸ்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக பாகிஸ்தான் தணிக்கை குழுவினர் பார்வைக்கு ‘ராய்ஸ்’ படம் அனுப்பி வைக்கப்பட்டது.

படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இஸ்லாமியர்களைக் குற்றவாளிகளாகவும் தேடப்படுபவர்களாகவும் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக ஆட்சேபனை தெரிவித்து பாகிஸ்தானில் ‘ராய்ஸ்’ படத்தைத் திரையிட தடை விதித்துள்ளனர்.

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தினர் எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தி அழித்தார்கள்.
பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியப் படங்களில் நடிக்கவும் எதிர்ப்புக் கிளம்பியது. பாகிஸ்தானும் இந்தியப் படங்களைத் திரையிடுவதை நிறுத்தியது.

இந்தத் தடையை நீக்கி பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்தியப் படங்களை பாகிஸ்தானில் திரையிட பிரதமர் நவாஸ் செரீப் அனுமதி அளித்துள்ளார்.

இந்த நிலையில்தான் ஷாருக்கானின் ராய்ஸ் படத்திற்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்