விமல் வீரவன்ச உள்ளிட்ட எழுவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிப்பு

விமல் வீரவன்ச உள்ளிட்ட எழுவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிப்பு

விமல் வீரவன்ச உள்ளிட்ட எழுவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 3:17 pm

விமல் வீரவன்ச, வீரகுமார திசாநாயக்க மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி கொழும்பு பௌத்தாலோக மாவத்தை மற்றும் ஹவ்லொக் வீதியை மறித்து மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்யித் ராட் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரட்ன மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்