வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 6:59 pm

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் 9 சந்தேகநபர்களுக்கான விளக்கமறியலை யாழ். மேல் நீதிமன்றம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.

சந்தேகநபர்கள் 9 பேரும் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபர்கள் 9 பேரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்