மட்டக்களப்பில் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஊக்குவிப்பு செயற்திட்டம்

மட்டக்களப்பில் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஊக்குவிப்பு செயற்திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 10:25 pm

எதிர்கால விளையாட்டு நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் முகமாக ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் முன்னெடுக்கும் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஊக்குவிப்பு செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஊக்குவிப்பு செயற்றிட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது.

தேசிய வீரர்களைக் கௌரவிக்கும் நோக்கில் இலத்திரனியல் ஊடகமொன்று ஏற்பாடு செய்துள்ள முதலாவது விருது வழங்கல் விழாவாக ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழா திகழ்கிறது.

வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த செயற்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி 17 வயதிற்குட்பட்டோருக்கான மல்யுத்த விளையாட்டில் திறமையை வெளிப்படுத்திய மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியின் எஸ். ருபிக் ஷன் தெரிவு செய்யப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்