பாகிஸ்தானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 3:02 pm

பாகிஸ்தானின் தென்கடற்பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

அதிகாலை சுமார் 3:03 மணியளவில் இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியான பஸ்னியின் தென்மேற்கு பகுதியில் 23 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 2015 ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 400 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு 7.6 என்ற அளவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால், 73 ஆயிரத்திற்கும் மேலானோர் பலியாகி இருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்