கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டம் மறியல் போராட்டமாக வலுப்பெற்றுள்ளது

கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டம் மறியல் போராட்டமாக வலுப்பெற்றுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 3:31 pm

முல்லைத்தீவில் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற காணி மீட்புப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றது.

கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியிலிருந்து மறியல் போராட்டத்தை இன்று ஆரம்பித்தனர்.

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்த  போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமினை அகற்றி, தமது சொந்த நிலத்தினை விடுவிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துயரப்படும் மக்களின் நலன் விசாரிப்பாளர்களாக மாத்திரமே அரசியல்வாதிகள் பிரசன்னமாகிக் கொண்டிருகின்றார்களே தவிர இதுவரை தீர்வினை வழங்க யாரும் முன்வரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டனர்.

சொந்த நிலத்தில் குடியேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதே இவர்களது நிலைப்பாடாக அமைந்துள்ளது.

இதேவேளை, கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பு இராணுவ முகாமை அகற்றக்கோரியும் புதுக்குடியிருப்பில் மக்கள் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்