தடுமாறும் தாருஸ்ஸாம்: பேரியல் அஷ்ரஃப்பிற்கு விபரம் தெரிந்தவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

தடுமாறும் தாருஸ்ஸாம்: பேரியல் அஷ்ரஃப்பிற்கு விபரம் தெரிந்தவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 8:11 pm

கட்சியை செழுமைப்படுத்தி அதன் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நம்பிக்கை நிதியத்தில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரியல் அஷ்ரஃப், 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2001 ஆம் ஆண்டு வரை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவும் கட்சியின் இணைத்தலைவராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

தலைவர் அஷ்ரஃபினால் வரையப்பட்ட யாப்பு விதிகளுக்கு அமைய, தலைவருக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராகவிருந்த பேரியல் அஷ்ரஃப் இந்த நிதியத்தின் தலைவராக இருந்திருக்க வேண்டும் என இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் நிதியத்தின் தலைவராக ஒருபோதும் இருக்கவில்லை என்றும் அவருக்கு நிதியத்தின் ஆவணங்கள் காண்பிக்கப்படவில்லை என்றும் தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பேரியல் அஷ்ரஃப்பிற்கு விபரம் தெரியவந்தவுடன் அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பேரியல் அஷ்ரஃப் நிதியத் தலைமையை வகிக்கும் தகுதியை இழந்துவிட்டதாகவும் தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்களில் கூறப்பட்டுள்ளது.

நிதியத்திற்கு தலைவர் ஒருவர் இல்லையென்பதால் அதன் நிறைவேற்றுக்குழு கூட முடியாதென்று நிதியத்தின் விதிமுறைகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஏதோவொரு வகையில் இந்த வழிமுறையும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நலனைக் கருத்திற்கொள்ளாமல் தனது சொந்த நலனை மட்டும் கருத்திற்கொண்டதன் விளைவாகவே இன்று கட்சியின் சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தின் 22 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்