கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 8:22 pm

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்தில் நிலவும் விடுதிப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் சிலவற்றை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வருடாந்த கல்வி கால எல்லை மற்றும் அரையாண்டு கால எல்லை நீடிக்கப்பட்டமைக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தமது விடுதிகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்