அரிசிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டாலும் சந்தை விலையில் மாற்றமில்லை

அரிசிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டாலும் சந்தை விலையில் மாற்றமில்லை

அரிசிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டாலும் சந்தை விலையில் மாற்றமில்லை

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 4:03 pm

இறக்குமதி செய்யப்படுகின்ற இரண்டு வகை அரிசிக்கான நிர்ணய விலை நேற்று முன்தினம் (06) அறிவிக்கப்பட்டாலும் சந்தையில் அரிசியின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

அரிசியின் நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமையே இதற்குக் காரணமாகும்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 80 ரூபா எனவும் நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 70 ரூபா எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இருந்த போதிலும், நேற்றைய தினம் சந்தையில் அரிசியின் விலை குறைக்கப்பட்டிருக்கவில்லை என மக்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நுகர்வோர் சபை இன்று கூடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் கூறினார்

இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட அரசிக்கான நிர்ணய விலை குறித்து உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்