ஶ்ரீலங்கன் விமான நிறுவன முதலீட்டிற்கு அமெரிக்காவின் TPG நிறுவனம் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு

ஶ்ரீலங்கன் விமான நிறுவன முதலீட்டிற்கு அமெரிக்காவின் TPG நிறுவனம் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு

ஶ்ரீலங்கன் விமான நிறுவன முதலீட்டிற்கு அமெரிக்காவின் TPG நிறுவனம் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 8:57 pm

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கென பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிறுவனங்களில் TPG என்ற அமெரிக்க நிறுவனம் தகுதியானது என பிரேரிக்கப்பட்டுள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

இதுகுறித்து இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா நிறுவனம் என்பவற்றை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்வதற்காக அரசாங்கம் அண்மையில் முதலீட்டாளர் ஒருவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி விண்ணப்பித்திருந்த 10 நிறுவனங்களில் இலங்கையுடன் தொடர்புபட்ட பி.எஸ். எயார் நிறுவனம், மாலைத்தீவின் சுப்பர் குரூப் நிறுவனம், அமெரிக்காவின் TPG  நிறுவனம் ஆகியன இறுதிப்பட்டியலில் தெரிவாகியிருந்தன.

இந்த நிறுவனங்களில் தகுதியான முதலீட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அந்த குழு தற்பொது முதலீட்டாளர் ஒருவரின் பெயரை முன்மொழிந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்