250,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள திருமண ஆடையை தீயிட்டுக் கொளுத்திய பாப் பாடகி மரியா கரே

250,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள திருமண ஆடையை தீயிட்டுக் கொளுத்திய பாப் பாடகி மரியா கரே

250,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள திருமண ஆடையை தீயிட்டுக் கொளுத்திய பாப் பாடகி மரியா கரே

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 6:12 pm

பிரபல பாப் நட்சத்திரங்களில் ஒருவர் மரியா கேரி. இவர் கவர்ச்சிகரமாக பாப் இசை நிகழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்றவர்.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான இவருக்கும், முன்னாள் கணவர் நிக் கேனனுக்கும் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

நிக் கேனனைப் பிரிந்துள்ள மரியா கேரி, அவுஸ்திரேலிய தொழிலதிபரான ஜேம்ஸ் பெக்கரைக் காதலித்து திருமணம் செய்யவிருந்தார்.

இதற்கென மரியா கேரிக்கு 250,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான திருமண ஆடை வடிவமைக்கப்பட்டு தயாராகவிருந்தது.

இந்நிலையில், மரியாவும் ஜேம்ஸ் பெக்கரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதனால் விரக்தியடைந்த மரியா, 250,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான திருமண ஆடையை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.

விலை மதிப்பு மிக்க தனது திருமண ஆடையை தீயிட்டுக் கொளுத்துவதையும் அது எரிந்து சாம்பலாகும் காட்சியையும் தனது இசை அல்பத்தில் வெளியிட்டுள்ளார் மரியா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்