வடபகுதி கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

வடபகுதி கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

வடபகுதி கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 3:37 pm

வடபகுதி கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவிற்கு தெற்கேயுள்ள கடற்பரப்பினுள் குறித்த மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

தமிழக மீனவர்களின் படகொன்றையும் பறிமுதல் செய்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களும், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் இவர்களில் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்