மட்டக்களப்பு சத்துருகொண்டான் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை உடைத்து கொள்ளை

மட்டக்களப்பு சத்துருகொண்டான் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை உடைத்து கொள்ளை

மட்டக்களப்பு சத்துருகொண்டான் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை உடைத்து கொள்ளை

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 8:43 pm

மட்டக்களப்பு – சத்துருகொண்டான் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

ஆலயத்தின் மூலஸ்தான அம்மனின் நகைகள் மற்றும் மடப்பள்ளி பொருட்கள் என்பன களவாடப்பட்டுள்ளன.

ஆலயக்கூரை உடைக்கப்பட்டுள்ளதாக மீனவர் ஒருவரால் ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆலய நிர்வாகத்தினரால் மட்டக்களப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் மட்டப்பளப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஆலயங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்