பிளாட்டினம் விருது வழங்கல் விழாவிற்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் பொலன்னறுவையில் முன்னெடுப்பு

பிளாட்டினம் விருது வழங்கல் விழாவிற்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் பொலன்னறுவையில் முன்னெடுப்பு

பிளாட்டினம் விருது வழங்கல் விழாவிற்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் பொலன்னறுவையில் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 9:05 pm

விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கின்றவர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் முன்னெடுக்கும் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவிற்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் இன்று பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தேசிய வீரர்களைக் கௌரவிக்கும் நோக்கில் இலத்திரனியல் ஊடகமொன்று ஏற்பாடு செய்துள்ள முதலாவது விருது வழங்கல் விழா ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவாகும்.

வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தில் பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த செயற்திட்டத்தில் பொலன்னறுவை மாவட்டத்திற்கான அதி சிறந்த வீரராக தேசிய மற்றும் சரவதேச ரீதியில் பளுதூக்கல் நிகழ்ச்சியில் திறமையை வெளிப்படுத்திய பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் இசுரு சேனாதீர தெரிவு செய்யப்பட்டார்.

இந்த செயற்திட்டத்தில் ரக்பி விளையாட்டு தொடர்பான நுணுக்கங்களும் பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்