நீதவானை நோக்கி விரல் நீட்டி கோஷமிட்ட நபருக்கு சிறைத்தண்டனை

நீதவானை நோக்கி விரல் நீட்டி கோஷமிட்ட நபருக்கு சிறைத்தண்டனை

நீதவானை நோக்கி விரல் நீட்டி கோஷமிட்ட நபருக்கு சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 3:17 pm

நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு ஏழாண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதவானை நோக்கி விரல் நீட்டி கோஷமிட்டதால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நபர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தனக்கெதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்