தடுமாறும் தாருஸ்ஸலாம்: தலைவர் மரணிப்பதற்கு 5 மாதங்களுக்கு முன் கம்பனி கபளீகரம்!

தடுமாறும் தாருஸ்ஸலாம்: தலைவர் மரணிப்பதற்கு 5 மாதங்களுக்கு முன் கம்பனி கபளீகரம்!

தடுமாறும் தாருஸ்ஸலாம்: தலைவர் மரணிப்பதற்கு 5 மாதங்களுக்கு முன் கம்பனி கபளீகரம்!

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 9:09 pm

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை செழுமைப்படுத்தி, செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக அதன் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபினால் நம்பிக்கை நிதியம் ஒன்றும், கம்பனி ஒன்றும் உருவாக்கப்பட்டது.

அவற்றில் ஒன்றான யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் லிமிட்டெட் என்ற கம்பனியின் பணிப்பாளர்கள் விடயத்தில் குழறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக ”தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பணிப்பாளராக மறைந்த முன்னாள் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் பதவி வகித்த போது, அக்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவுடன் தலைவர் அஷ்ரஃப் முரண்பட்டு இருந்தமையினால், இந்த நிறுவனங்களின் பணிப்பாளராக இருப்பது ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்போது பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு இணங்கிய தலைவர் இராஜினாமா செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தைக் கோரியதாகவும், உடனே நஸீர் அஹமட் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த படிவடித்தை தலைவரிடம் நீட்டியதாகவும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, குறித்த படிவத்தில் தலைவர் அஷ்ரஃப் இராஜினாமா செய்வதற்கான கையொப்பத்தை இட்டு மீளக் கையளித்ததாக இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தனது இடத்திற்கு தனது மகனை நியமனம் செய்யுமாறு தலைவர் அஷ்ரஃப் கட்டளையிட்டதாக ”தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவரின் திடீர் மரணத்தின் பின்னர் தலைவரின் கையெழுத்திட்ட வெற்றுப்படிவத்தை நிரப்பி, தலைவரின் மகனின் பெயரைக் குறிப்பிடாமல், தலைவர் மரணிப்பதற்கு சுமார் ஐந்து மாதங்களுக்கு முந்திய 2000.04.27 ஆம் திகதியை இட்டு கம்பனியை கபளீகரம் செய்துள்ளதாக இந்த புத்தகம் குற்றஞ்சாட்டுகின்றது.

 

 

 

தடுமாறும் தாருஸ்ஸலாம் தொடரும்…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்