சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்றதிகாரியின் கார் மீது துப்பாக்கிச் சூடு: வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்றதிகாரியின் கார் மீது துப்பாக்கிச் சூடு: வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 4:31 pm

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைட்டம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி டொக்டர் சமீர சேனாரத்ன பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பாக முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாலபே சந்திரிக்கா குமாரதுங்க மாவத்தை ஊடாகப் பயணித்த காரின் மீது நேற்றிரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் டொக்டர் சமீர சேனாரத்னவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், அவர் பயணித்த காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பாக சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்றதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்புலத்தில் உள்ளவர்களைக் கண்டறிவதற்கான பக்கசார்பற்ற விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்