இறக்குவானை பொதுக் கழிவறையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

இறக்குவானை பொதுக் கழிவறையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

இறக்குவானை பொதுக் கழிவறையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 3:28 pm

இறக்குவானை நகர பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதி கழிவறையிலிருந்து சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் ஊழியர்கள் பொதுக்கழிவறையை இன்று காலை துப்புரவு செய்வதற்காக சென்றிருந்தபோது சிசுவின் சடலத்தை அவதானித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இறக்குவானை பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டனர்.

சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்