ஆட்சிப்பீடத்தில் அதிகக்காலம் வீற்றிருந்தவர் எனும் பெருமையைத் தனதாக்கினார் எலிசபெத் மகாராணி

ஆட்சிப்பீடத்தில் அதிகக்காலம் வீற்றிருந்தவர் எனும் பெருமையைத் தனதாக்கினார் எலிசபெத் மகாராணி

ஆட்சிப்பீடத்தில் அதிகக்காலம் வீற்றிருந்தவர் எனும் பெருமையைத் தனதாக்கினார் எலிசபெத் மகாராணி

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 5:23 pm

இங்கிலாந்தின் ராணியாக முடிசூடி 65 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார் எலிசபெத் மகாராணி.

இந்த 65 ஆண்டுப் பூர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் ஜார்ஜ் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மரணம் அடைந்தார்.

மன்னரின் மறைவிற்குப் பின்னர் அவரது மூத்த மகள் இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

1953 ஆம் ஆண்டு எலிசபெத்துக்கு இங்கிலாந்தின் ராணியாக முடிசூடப்பட்டது.

ராணி எலிசபெத் பதவியேற்று தற்போது 65 ஆண்டுகள் ஆகிறது. முன்னதாக ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா 1837 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 1901 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி இங்கிலாந்தின் ஆட்சிப்பீடத்தில் ராணியாக வீற்றிருந்தார். அதாவது சுமார் 63 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அரியணை ஏறி 65 ஆண்டுகள் ஆவதை ராணி எலிசபெத் நேற்றுக் கொண்டாடினார்.

இதனால், ஆட்சிப்பீடத்தில் அதிகநாள் வீற்றிருந்த ராணி எனும் பெருமையை தனதாக்கியுள்ளார் எலிசபெத் மகாராணி.

இதையொட்டி பங்கிங்ஹாம் அரண்மனை அருகே 41 பீரங்கிக் குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இலண்டனில் 61 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.

65 ஆண்டுகள் ஆட்சியை நினைவுகூரும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் தபால் தலையும் வெளியிடப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்