போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2017 | 7:42 pm

போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மொறட்டுவை வேல்ஸ் கல்லூரியில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மொறட்டுவை வேல்ஸ் கல்லூரியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு இதன்போது ஜனாதிபதி தலைமையில் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற தேக ஆரோக்கியப் பேரணியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்