மாலபே மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம்

மாலபே மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம்

மாலபே மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2017 | 9:47 pm

மாலபேயிலுள்ள சைட்டம் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீர சேனாரத்ன தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாலபேயில் உள்ள சந்திரிக்கா குமாரதுங்க மாவத்தையில் சமீர சேனாரத்னவின் கார் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் சைட்டம் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்