கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்தும் போராட்டம்

கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்தும் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2017 | 8:19 pm

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் இன்று வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பில் விமானப்படை முகாம் அமைந்துள்ள தமது காணியினை விடுவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் உடல் நிலை தொடர்பில் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் இன்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரியும், புதுக்குடியிருப்பில் மக்கள் ஆரம்பித்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னபாக தற்காலிகக்கூடாரம் அமைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வாயிலை மறித்து இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்