காங்கேசன்துறையில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு: விசாரணைகள் ஆரம்பம்

காங்கேசன்துறையில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு: விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2017 | 8:09 pm

காங்கேசன்துறை – நல்லிணக்கபுரம் பகுதியில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயதான கஜேந்திரகுமார் கஜீபன் என்ற சிறுவன், கடந்த 04 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்த நிலையில், கிணறொன்றிலிருந்து நேற்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுவன் காணாமற்போயுள்ளதாக பெற்றோர் காங்கேசன்துறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனைகள் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நீரில் மூழ்கியே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சடலம் உறவினர்களிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு தொடர்பான பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்