அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2017 | 3:25 pm

நாடளாவிய ரீதியில் வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி சுமார் 350 பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

இதில் 100 பஸ்கள் வரை மாகாணங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.

வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸாருக்கு தகவல் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தியுள்ளவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பதற்கான அதிகாரம் உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

இதனைத் தவிர, நீதிமன்றத்தின் ஊடாக இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கவும் முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

விலைமனு கோரல் நடைமுறையைப் பின்பற்றி புதிதாக பஸ்களுக்கான வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்