யாழ். மாவட்ட செயலகம் அருகில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம்

யாழ். மாவட்ட செயலகம் அருகில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம்

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 8:22 pm

யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த முடியாத வகையில், பொலிஸார் நீதிமன்ற உத்தரவினைப் பெற்றிருந்தனர்.

எவ்வாறாயினும், அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

”இலங்கை சுதந்திரனம் பெப்ரவரி – 04, தமிழ் தேசிய இனத்தின் துக்க தினம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்