மூன்றாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றிகொள்வதற்கான காலம் எழுந்துள்ளது – சஜித் பிரேமதாச

மூன்றாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றிகொள்வதற்கான காலம் எழுந்துள்ளது – சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 6:46 pm

மூன்றாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றிகொள்வதற்கான காலம் எழுந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சூரியவெவ – கருவலகஸ்வெவ பிரதேசத்தில் 336 ஆவது உதா கம்மானவிற்கான அடிக்கல் நாட்டு விழாவிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் குறிப்பிட்டதாவது,

[quote]முதலாவது சுதந்திரப் போராட்டத்தின் பின்னர் இரண்டாவது சுதந்திரப் போராட்டமும் இடம்பெற்றது. முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றிகொண்டதன் மூலம், நாடென்ற ரீதியில் பெருமையுடன் முன்னோக்கி செல்கின்றோம். மூன்றாவது சுதந்திரப் போராட்டமொன்றும் எமக்குள்ளது. வறுமையை ஒழிக்கும் போராட்டம் அது. நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் பசியின்றி வாழும் உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் சுதந்திரப் போராட்டமே அது. அனைவருக்கும் தமது காணியில் வீடொன்றை உரித்தாக்கும் சுதந்திரப் போராட்டம். அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் சமூகத்தில் வாழ்வதற்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய போராட்டத்தை வெற்றிகொள்வதே மூன்றாவது சுதந்திரப் போராட்டத்தின் நோக்கமாகும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்