மட்டக்களப்பில் வீதி விஸ்தரிப்பிற்காக உடைக்கப்பட்ட வீடுகள், மதில்களுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை

மட்டக்களப்பில் வீதி விஸ்தரிப்பிற்காக உடைக்கப்பட்ட வீடுகள், மதில்களுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 9:51 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசாங்க காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது சுவீகரிக்கப்பட்ட தமது காணிகளுக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பிரதான வீதிகளின் விஸ்தரிப்பிற்காக வீதியோரங்களில் காணப்பட்ட வீடுகள் மற்றும் மதில்கள் உடைக்கப்பட்ட போதிலும் அதற்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை.

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உடைக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்கப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்ட போதிலும் இன்று வரை அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் சுட்டிக்காட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்