மக்கள் சக்தி: திருகோணமலை மாவட்டத்திற்கான பயணம் இன்றுடன் நிறைவு

மக்கள் சக்தி: திருகோணமலை மாவட்டத்திற்கான பயணம் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 7:48 pm

அடிப்படை நிலைத்தகவுகள் கூட இன்றி அன்றாடம் வறுமையில் உழலும் மக்களைத் தேடிப் பயணிக்கும் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான பயணம் இன்றுடன் நிறைவுக்கு வந்தது.

பல வருடங்களுக்கு முன்னர் மலையகம்சார் பகுதிகளில் இருந்து சென்று குடியேறிய கப்பல்துறை பிரதேச மக்கள் வாழ்வியலை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறாத நிலையில், இங்குள்ள இளைஞர்களின் நிலை கவலைக்குரியதாய்த் தொடர்கின்றது.

மீள்குடியேறிய நிலையில் தாம் தற்காலிகக் கொட்டில்களில் தமது வாழ்வினை முன்னெடுத்து வருவதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

இன்று விளாங்குளம் பகுதிக்கும் நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் விஜயம் செய்திருந்தனர்.

சுத்தமான குடிநீர் என்பது இங்குள்ள மக்களுக்குப் போராட்டமாகவே தொடர்கின்றது.

முத்துநகர் பகுதிக்கு விஜயம் செய்த நியூஸ்பெஸ்ட் குழாத்தினரை அப்பகுதி மக்கள் ஆதரவுடன் வரவேற்றனர்.

குடிநீர் மற்றும் நிரந்தர வீடின்றி இந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அடுத்து திருக்கடலூர் பகுதிக்கு மக்கள் சக்தியின் பயணம் தொடர்ந்தது.

தமது இருளினை ஔியாக்கும் கலங்கரை விளக்கம் குறை நிர்மாணத்துடன் இருப்பதால் இங்குள்ள மீனவர் குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தனர்.

கலங்கரை விளக்கம் இல்லாததால் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்திற்கான தமது பயணத்தை நிறைவு செய்த நியூஸ்பெஸ்ட் குழுவினர் அங்கிருந்து விடைபெற்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்