சுதந்திர தினம்: ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி

சுதந்திர தினம்: ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 7:36 pm

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மிகவும் தீர்மானமிக்க மற்றும் சவால்மிக்க தருணத்திலேயே சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதாக, 69 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாத்து, எமது எண்ணக்கருவின் ஊடாக அனைத்து இனத்தவர்களும் சிறப்பாக வாழக்கூடிய நாடொன்றை உருவாக்கும் பொறுப்பு அனைவரதும் தோள்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அணைந்துகொண்டிருந்த ஜனநாயகம் மற்றும் மனிதாபிமானத்தின் வெளிச்சத்தை மீள ஔிரச் செய்ய முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பொருளாதார, சமூக, மதங்களுக்கு இடையிலான சுதந்திரம் தொடர்பில், தற்போதைய அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனநாயகத்தின் உண்மையான பயனாளிகளாக இருப்பதற்கு உதவும் சமத்துவம் மற்றும் கண்ணியம் என்பனவற்றின் அடிப்படையில், இந்த நாட்டின் சகல மக்கள் மத்தியிலும் இந்த ஆண்டு நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்ப்பு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

69 ஆவது சுதந்திரதின வாழ்த்துச் செய்தியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்