கிளிநொச்சி, வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுகள்

கிளிநொச்சி, வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுகள்

கிளிநொச்சி, வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 3:40 pm

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் மாவட்ட கட்டளைத் தளபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்

கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றிருந்தன

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா செயலகத்தை மையப்படுத்தி இடம்பெற்றிருந்தன.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பிரதேச மக்களும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்