காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடு மீட்கப்பட்ட போராட்டம் தொடர்பிலான தொகுப்பு

காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடு மீட்கப்பட்ட போராட்டம் தொடர்பிலான தொகுப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 9:33 pm

கலாசார மற்றும் சமூக ரீதியல் மகத்தான வரலாற்றை தன்னகத்தே கொண்ட இலங்கையின் ஆட்சி அதிகாரம் 1505 ஆம் ஆண்டு போர்த்துகேயரின் ஆக்கிரமிப்புடன் கைமாறியது.

அன்று முதல் ஒல்லாந்தரும் ஆங்கிலேயர்களும் இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

1505 ஆம் ஆண்டு ஆரம்பமான காலனித்துவ ஆட்சியின் முக்கிய மைல்கல்லாக 1815 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கண்டி உடன்படிக்கை அமைகின்றது.

இந்த உடன்படிக்கை மூலம் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரமும் ஆங்கிலேயருக்கு தாரைவார்க்கப்பட்டதுடன், நாட்டில் சமூக மற்றும் கலாசார ரீதியிலும் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது,

நாடு சூறையாடப்படுவதற்கு எதிராக இன, மத பேதமின்றி மக்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1818 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பமாக களத்தில் போராடிய வீர மொனரவில, கெப்பெட்டிபொல உள்ளிட்ட தேசியத் தலைவர்களை படுகொலை செய்த ஆங்கில ஆட்சியாளர்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தினர்.

1848 ஆம் ஆண்டு கொங்காலேகொட பண்டா, வீரபுரன்னப்பு ஆகியோர் தலைமையில் மாத்தளையில் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை சூழ்ச்சியால் காலனித்துவ ஆட்சியாளர்கள் வெற்றிகொண்டனர்.

ஆயுதப் போராட்டத்திற்கு பதிலாக 1917 ஆம் அண்டு அரசியல் ரீதியிலான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தப் போராட்டம் சுதந்திரத்தை நோக்கி நாட்டை இட்டுச் சென்றது.

மகா மாண்ய டி.எஸ். சேனாநாயக்க உள்ளிட்ட சிங்களத் தலைவர்கள் மாத்திரமல்லாது தமிழ், முஸ்லிம் தலைவர்களும் போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.

இதன் பலனாக 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்