என்னால் நடிக்க முடியும் என்பது கூட எனக்குத் தெரியாது – சாய்பல்லவி

என்னால் நடிக்க முடியும் என்பது கூட எனக்குத் தெரியாது – சாய்பல்லவி

என்னால் நடிக்க முடியும் என்பது கூட எனக்குத் தெரியாது – சாய்பல்லவி

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 6:16 pm

‘பிரேமம்’ மலையாளப் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய்பல்லவி.

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், முதன்முறையாக மாதவன் ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒன்லைன் வாக்கெடுப்பில் 2016 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நடிகையாக இவருக்கு அதிக வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

எளிமையாகக் காட்சியளிக்கும் இவரது தோற்றம் இரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இது குறித்து சாய்பல்லவி தெரிவித்ததாவது,

[quote]மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். நான் மிகவும் விரும்பப்படும் நடிகையா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை தெரிவு செய்த இரசிகர்கள் இனிமையானவர்கள். ‘பிரேமம்’ படத்தில் நான் நடித்தேன். ஆனால், இதுவரை என்னால் நடிக்க முடியும் என்பது கூட எனக்குத் தெரியாது. இப்போதும் அதை நம்ப முடியவில்லை. நான் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தினமும் தியானம் செய்கிறேன். உடல் எடை அதிகரிக்கும் போது அதைக் கட்டுப்படுத்த யோகா செய்கிறேன். நான் சுத்த சைவம். கடந்த 3 ஆண்டுகளில் எனக்கு காய்ச்சல் வந்ததே இல்லை. தியானம்தான் இதற்குக் காரணம்[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்