திருகோணமலையின் பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்ற மக்கள் சக்தி குழுவினர்

திருகோணமலையின் பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்ற மக்கள் சக்தி குழுவினர்

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 9:13 pm

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்றைய தினமும் திருகோணமலை மாவட்டத்தின் பல பின்தங்கிய கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை – மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாரதிபுரம், குமாரபுரம், நல்லூர் மற்றும் வெறுகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உப்பூறல் ஆகிய கிராமங்களுக்கு மக்கள் சக்தி குழுவினர் சென்றிருந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் பாரதிபுரம் பாடசாலை வீதியை புனரமைத்துத்தருமாறு கிராம மக்கள் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர்.

குமாரபுரம் கிராமத்திற்குச் சென்ற மக்கள் சக்தி குழுவினர் அந்தப் பகுதி மக்கள் வாழ இருப்பிடம் இன்றி இருப்பதை அவதானித்தனர்.

மேலும், சுத்தமான குடிநீர் இன்றியும் இந்தப் பகுதி மக்கள் அல்லறுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்