ஶ்ரீலங்கன் விமான நிறுவன முதலீட்டாளர் தெரிவு: இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை – ரவி கருணாநாயக்க

ஶ்ரீலங்கன் விமான நிறுவன முதலீட்டாளர் தெரிவு: இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை – ரவி கருணாநாயக்க

ஶ்ரீலங்கன் விமான நிறுவன முதலீட்டாளர் தெரிவு: இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை – ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 7:35 pm

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு முதலீட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

முதலீட்டாளர் தெரிவு செய்யப்பட்டவுடன் அது பற்றி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர் தெரிவு தொடர்பில் வெளியான பொய்யான தகவல்களுக்கு அமைச்சர் கபீர் ஹாசீமின் அமைச்சினால் சரியான பதில் வழங்கப்படும் எனவும் முடிவுகள் இதுவரை அமைச்சரவை உப குழுவிற்கு வழங்கப்படவில்லை எனவும் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்