விஜய் பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் விவேகம்?

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் விவேகம்?

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் விவேகம்?

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 6:18 pm

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57 ஆவது படமான ‘விவேகம்’ படத்தின் போஸ்டர் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், ‘விவேகம்’ படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களை வியாழக்கிழமையில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல், சிறுத்தை சிவாவும் தனது படங்களை வியாழக்கிழமையிலேயே ரிலீஸ் செய்வதை செண்டிமெண்டாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால் படத்தை ஒருநாள் முன்னதாக வியாழன் அன்று ஜுன் 22 ஆம் திகதியே வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஜுன் 22 ஆம் திகதி விஜய்யின் பிறந்தநாள் ஆகும்.

எவ்வாறாயினும், பட வெளியீட்டுத் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்