முறக்கொட்டாஞ்சேனை தனியார் காணியில் மனித எச்சங்கள்: கள ஆய்வு நடத்தப்பட்டது

முறக்கொட்டாஞ்சேனை தனியார் காணியில் மனித எச்சங்கள்: கள ஆய்வு நடத்தப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 8:21 pm

மட்டக்களப்பு, ஏறாவூர் – முறக்கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் மனித எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் குழி தொடர்பில் இன்று கள ஆய்வு நடத்தப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி பீ.சீ.எஸ். பெரேரா தலைமையில் இன்று பிற்பகல் கள ஆய்வு நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த குழியின் அகழ்வுப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, அதற்கான செலவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இன்று ஆராயப்பட்டுள்ளது.

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த தனியார் காணியொன்றில் இந்தக் குழி உள்ளது.

அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் நாளை (03) தீர்மானிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி குறித்த தனியார் காணியில் குழி ஒன்றை அகழ்வதற்கு முற்பட்ட போது அதில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கக்கூடிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்