ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலை வழக்கு விசாரிக்கப்படவுள்ளது

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலை வழக்கு விசாரிக்கப்படவுள்ளது

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலை வழக்கு விசாரிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 4:38 pm

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலை வழக்கை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தனிப்பட்ட காரணத்திற்காக இந்த வழக்கு விசாரணையில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

இதன் பிரகாரம், இந்த வழக்கை விசாரிப்பதற்காக கம்பஹா மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வெலிவேரிய பகுதியிலுள்ள மைதானமொன்றிற்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உள்ளிட்ட 14 பேர் கொலை செய்யப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்