கேப்பாப்பிலவு மக்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்

கேப்பாப்பிலவு மக்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 8:08 pm

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிலக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பகுதியில் விமானப்படை வசமுள்ள 83 பேருக்கான காணியை விடுவிப்பதற்கு நேற்று முன்தினம் (31) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

விமானப்படை முகாம் அமைந்துள்ள காணி வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானதெனவும், உரிய அனுமதியுடனேயே அந்தப் பகுதியில் முகாம் இயங்கி வருவதாகவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

காணி தொடர்பில் மக்களுக்குப் பிரச்சினைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக அவற்றிற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளதாகவும் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன மேலும் குறிப்பிட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்