கூடுதல் விலைக்கு சீனி விற்றால் வழக்குத் தொடரப்படும் என அறிவிப்பு

கூடுதல் விலைக்கு சீனி விற்றால் வழக்குத் தொடரப்படும் என அறிவிப்பு

கூடுதல் விலைக்கு சீனி விற்றால் வழக்குத் தொடரப்படும் என அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 4:30 pm

நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

வியாபாரிகள் சிலர் கூடுதல் விலையில் சீனி விற்பனையில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிலோகிராம் சீனியின் நிர்ணய விலை 93 ரூபா என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதனைவிட கூடுதல் விலைக்கு சீனி விற்கப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக மாவட்ட ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்