குமார் குணரட்னத்திற்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது

குமார் குணரட்னத்திற்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது

குமார் குணரட்னத்திற்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 4:18 pm

முன்னிலை சோஷலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னத்திற்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

1948 அம் ஆண்டின் 18 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஒதுக்கீடுகளுக்கு அமைவாக, அவருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை இரத்து செய்து, அதனை மூன்று மாதங்களுக்குள் குமார் குணரட்னம் அறிவிக்க வேண்டும் என்றும் குடிவரவு – குடியகல்வு பிரதிக்கட்டுப்பாட்டாளர் சாமிக்க கமகே கூறினார்.

அவ்வாறு அறிவிக்காத பட்சத்தில், குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜாவுரிமை இடைநிறுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்