அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்சன் பதவியேற்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்சன் பதவியேற்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்சன் பதவியேற்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 5:05 pm

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக 64 வயதான ரெக்ஸ் டில்லர்சன் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில், துணை அதிபரான மைக் பென்ஸ், டில்லர்சனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பின் போது உரையாற்றிய டில்லர்சன், தம்மை வெளியுறவுத்துறை அமைச்சராக்கிய அதிபர் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக டில்லர்சனை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிப்பது தொடர்பாக செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 56-43 என்ற விகிதத்தில் டில்லர்சன் நியமனம் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, வெள்ளை மாளிகையில் இந்த பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்