பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய இலங்கை வங்கி தொடர்பில் கணக்காய்வு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய இலங்கை வங்கி தொடர்பில் கணக்காய்வு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2017 | 9:10 pm

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறிகல் கொடுக்கல் வாங்கலுக்கு, கடன் வழங்கியமைக்காக இலங்கை வங்கி தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ள கணக்காய்வாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய முறிகல் கொடுக்கல் வாங்கலின் போது பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு இலங்கை வங்கி பெருந்தொகை கடன் வழங்கியமை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்தார்.

இலங்கை வங்கி பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய 12.5, 12.75 மற்றும் 13 வீத அடிப்படையில் 13 பில்லியன் வரை விலை கோரப்பட்டிருந்ததாக கோப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆரம்ப வர்த்தகர் சார்பாக மற்றுமொரு ஆரம்ப வர்த்தகர் மத்திய வங்கியின் முறிகல் தொடர்பில் விலைமனு முன்வைத்த முதல் சந்தர்ப்பம் இதுவென செயற்குழுவின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்