துபாயில் பல வீடுகளில் கொள்ளையிட்ட 6 இலங்கையர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

துபாயில் பல வீடுகளில் கொள்ளையிட்ட 6 இலங்கையர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

துபாயில் பல வீடுகளில் கொள்ளையிட்ட 6 இலங்கையர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2017 | 11:12 am

துபாயில் வீடுகளை உடைத்து பொருட்களை கொள்ளையிட்ட ஆறு இலங்கையர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

துபாயிலுள்ள மாளிகைகளுக்குள் நுழைந்து தங்க நகைகள், பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை இவர்கள் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐந்தாண்டு சிறை தண்டனையின் பின்னர் குறித்த ஆறு பேரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ள 6 இலங்கையர்களுக்கும் நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்வதற்காக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.