ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்டின் பிளட்டினம் விருதிற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள்  ஆரம்பம்

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்டின் பிளட்டினம் விருதிற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்டின் பிளட்டினம் விருதிற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 10:05 pm

சிறந்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நோக்கில் நாட்டின் இலத்திரனியல் ஊடக வலையமைப்பொன்று முதன் முறையாக ஏற்பாடு செய்திருக்கும் விருது வழங்கல் விழாவே ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளட்டினம் விருது வழங்கல் விழாவாகும்.

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளட்டினம் விருதுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இம்முறை ஸ்போட்ஸ் பெஸ்ட்டின் பிளாட்டினம் விருதுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் கொழும்பு தேஸ்ட்டன் கல்லூரியில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இந்த திட்டத்தினூடாக தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து தொடர்பில் மாணவர்களை தெளிவுப்படுத்தும் கருத்தரங்கொன்றும் , இலங்கை தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பிரதம தலைவர் டொக்டர் சீவலி ஜெயவிக்கிரமவினால் நடத்தப்பட்டது.

விளையாட்டு சுகாதாரம் தொடர்பாக டொக்டர் லால் ஏக்கநாயக்க மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

இதணையடுத்து முன்னாள் றக்பி வீரர் நிஹால் மீட்பஹே றக்பி விளையாட்டு தொடர்பாக விளக்கமளித்தார், அத்துடன் விளையாட்டு அறிவிப்பாளர்களுக்கான திரைப் பரீட்சை மற்றும் வானொலி குரல் தேர்வு என்பனவும் இதன்போது நடத்தப்பட்டன.

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட 30 பாடசலைகளில் பிளட்டினம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளதுடன் இதன் போது திறமையான வீர வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

மேலும் ஒவ்வொரு கருத்தரங்கின் போதும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வீர வீராங்கனைகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்