ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிரதேச செயலகங்களின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிரதேச செயலகங்களின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிரதேச செயலகங்களின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 7:02 pm

கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களின் ஊழியர்கள் இன்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

திவுலப்பிடிய பிரதேச செயலக உத்தியேகத்தர்கள் இன்று எதிரப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

இதனால் நீர்கொழும்பு – மீரிகம வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கம்பஹா பிரதேச செயலக ஊழியர்களும் மாவட்ட செயலக ஊழியர்களும் கம்பஹா ரயில் நிலையம் வரை பேரணியாக சென்றனர்.

இதேவேளை கட்டானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அத்தனகலை பிரதேச செயலக ஊழியர்கள் நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீரிகம நகரிலும் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு பிரதேச செயலக ஊழியர்களும் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்