முறிகள் மோசடி தொடர்பிலான தகவல்களை வெளியிடும் அதிகாரிகளை சிரமத்திற்கு உள்ளாக்கத் திட்டம்

முறிகள் மோசடி தொடர்பிலான தகவல்களை வெளியிடும் அதிகாரிகளை சிரமத்திற்கு உள்ளாக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 8:14 pm

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனை வெளிப்படுத்தும் அரச அதிகாரிகளை சிரமத்திற்கு உள்ளாக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

கணக்காய்வாளர் நாயகத்திற்கு விடுக்கப்படும் அழுத்தமும் அதன் ஒரு கட்டம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையான பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான 10 விடயங்கள் குறித்து அறிக்கையொன்றை வழங்குமாறு, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி நிதியமைச்சர், கணக்காய்வாளர் நாயகத்திடம் எழுத்துமூலம் கேட்டிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் கணக்காய்வாளர் நாயகத்தின் விடயத்திற்கு உட்படாத விடயங்களாக காணப்பட்ட போதிலும், தேசிய தேவையைக் கருத்திற் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு அந்த அறிக்கை கடந்த 16 ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டது.

குறித்த காலப்பகுதியில் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான 10 விடயங்கள் ஆராயப்பட்டதுடன், இது தொடர்பான ஆழமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு போதிய காலம் கிடைக்கவில்லை என்றும் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நிதியமைச்சர் பொறுமையாக செயற்படாமையினால், இது குறித்து ஆழமாக விசாரிப்பதற்கு போதிய காலம் கிடைக்கவில்லை என்றும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்