மழையுடனான காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழையுடனான காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 6:13 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் – தொப்பிகல பிரதான வீதி தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மட்டக்களப்பில் வானிலை வழமைக்கு திரும்பியுள்ள போதிலும், கிரான் – தொப்பிகல பிரதான வீதி தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை, திகிலிவட்டை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 2000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக இப்பிரதேசங்களுக்கான தரை வழிப் பாதை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், விசேட படகு சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்