மனோ கணேசன் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் கருத்து

மனோ கணேசன் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் கருத்து

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 7:52 pm

வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் வவுனியாவில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் அமைச்சர் மனோ கணேசன் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்குள் விளையாட முடியாது எனவும் 2020 ஆம் ஆண்டு வரை நாம் அரசியலில் இருப்போம் எனவும் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மனோ கணேசன் தெரிவத்திருந்தார்.

28.01.2017

[quote]நாம் விளையாடும் உறுப்பினர்கள் அல்ல. அரசியலுக்குள் விளையாட முடியாது. அதனால் எம்முடன் விளையாட வேண்டாம். தலைகீழாக நின்றாவது 2020 ஆம் ஆண்டு வரை நாம் அரசாங்கத்தில் இருப்போம்.[/quote]

இதேவளை கடந்த 29 ஆம் திகதி மனோ கணேசன் தெரிவித்த விடயம் பின்வருமாறு

[quote]இன்று ஆட்சி மாறியிருக்கின்றது. நாமெல்லாம் சேர்ந்து மாற்றியிருக்கின்றோம். இந்த நல்லாட்சி நம்மாட்சியாக வேண்டும். இன்னும் முழுமையாக நம்மாட்சி ஆகவில்லை. உண்மையை சொல்ல வேண்டும். இந்த நல்லாட்சியும் நமது தலையில் மிளகாய் அரைத்துவிடும் அதுதான் உண்மை.[/quote]

இவ்வாறு அமைச்சர் மனோ கனேசன் அவர்கள் தெரிவத்த கருத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்த கருத்து…

[quote]தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள். 2020 ஆம் ஆண்டு வரைக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை அசைத்து பார்க்க முடியாது என கூறிய அமைச்சர் நல்லிணக்கத்திற்கு பாதகமான நிலை ஏற்படும் பட்சத்தில் அரசை விட்டு வெளியேறுவோம் என அரசை எச்சரித்திருக்கின்றார்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்