தேசிய பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 7:24 pm

தேசிய பாதுகாப்பு மற்றும் வலய பாதுகாப்பிற்காக எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பேபுஸ்ஸ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

மேலும் கடந்த காலங்களைப் போன்று அல்லாது எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்புக்களை நிறைவேற்றும் போது புதிய தொழில்நுட்பத்துடன் தொடர்புபட வேண்டும் எனவும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார்

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

1956 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிங்க ரெஜிமன்ட் 24 படையணிகளைக் கொண்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்